Saturday 22 March 2014

ஓவியர்.திருப்பூர் சிராஜ்
ஓவியர்.திருப்பூர் சிராஜ், திருப்பூரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்மையான ஓவியராக திகழ்பவர். பல்வேறு மாதாந்திர, வாரந்திர, பத்திரிக்கைகளில் அட்டை ஓவியங்களையும், வண்ண ஓவியங்களையும், வரைந்துள்ளார். இதுவரை தனியாகவும், பல ஓவியர்களுடன் இணைந்தும் 13-க்கும் மேற்பட்ட ஓவியக்கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனந்தவிகடன் தானே புயல் நிவாரண நிதிக்காக நான்கு ஓவியங்களை வழங்கியுள்ளார். இவரது ஓவியங்கள் உலகமெங்கும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபுநாடுகள், மற்றும் ஆப்பிரிக்க நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் விற்பனையாகியுள்ளது.

Friday 7 February 2014

ஓவியர் திரு.M மணிராஜ்




ஓவியர் மணிராஜ் திருப்பூரில் பிறந்தவர். காலம்சென்ற ஓவியர். திரு.வரதனின் ஓவியங்களைப் பார்த்து ஓவியம் கற்றுக்கொண்டவர், பதிமூன்று வயதிலேயே விளம்பர போர்டுகள் வரைவதில் மிகத் திறமையானவர் எனப்பெயர் பெற்றவர். இன்றுவரை கோவையின் ஓவியர்கள் மத்தியில் தனிப்புகழோடு திகழ்பவர். 1997 -ஆண்டு கோவைமாவட்ட தொழில்துறை ஓவியர்கள் சங்கம் இவருக்கு, ஓவியக்கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. சென்னை லலித்கலா அகடமியில் உறுப்பினராக உள்ளார். விகடன் பிரசுரம் நடத்திய தானே புயல் நிவாரண நிதி ஓவியக் கண்காட்சியில் பங்கேற்று நற்சான்றிதழ் பெற்றவர். கோவை, மைசூர், பெங்களூர், போன்ற நகரங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றவர்.


Saturday 2 February 2013

ஓவியர்.திரு. S.அந்தோணிசாமி

ஓவியர். திரு. ஸ்.அந்தோணிசாமி அவர்கள், கோவை ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்றைய புகழ்மிக்க ஓவியர்கள் பலருக்கு ஆசிரியராக திகழ்ந்தவர். 'சித்ரகலா அகாடமி' உருவாக்கத்தில் இவரது பங்கும் உண்டு. சித்ரகலா அகாடமி உருவாகி முதல் இரண்டு ஆண்டுகள் இணை செயலாளராக பணியாற்றியவர். இன்றுவரை ஓயாமல் ஓவியப்பயணி ஆற்றிகொண்டிருப்பவர்.












Wednesday 12 December 2012

ஓவியர். திரு.T.மதி


ஓவியர். திரு.T.மதி அவர்கள்,
35 ஆண்டுகளாக ஓவியராக வாழ்பவர்.

சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பட்டயம் பெற்றவர்.

சென்னை, பெங்களூர், மற்றும் கோவையில் பல ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.

1975 - ம் ஆண்டு விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட் வழங்கிய சிறந்த ஓவியத்திற்க்கான விருதும்,

2012 - ம் ஆண்டு கோவை கான்டம்லேட் ஆர்ட் கேலரியின் பரிசையும் வென்றவர்.

கல்கி, அரும்பு, போன்ற வார இதழ்களிலும், தினமலர், ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களிலும் இவரைப் பற்றிய கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் பிரசுரமாகியுள்ளது.